01/09/2023
"இஸ்ரோவின் மனித ரோபோ வியோமித்ரா"
இஸ்ரோவின் ககன்யான் திட்டம் என்பது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும்.
இரண்டாவது சோதனையில் வியோமித்ரா என்ற பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப உள்ளனர்.
மூன்றாம் கட்டமாக பூமியிலிருந்து 300 - 400 கிலோமீட்டர் தொலைவில் 3 இந்திய வீரர்களை மூன்று நாட்கள் விண்வெளிக்கு அனுப்பி பின்னர் பூமிக்கு திரும்பும் திட்டம் தான் ககன்யான் திட்டம் எனப்படும்.