iNet Technology

iNet Technology We are best and cheap website designer with high quality standards. websites can be developed for any purpose and for any type of business.

Our specialists provide dedicated services by completely understanding our client’s requirements. We are a certified website design company that can meet any simple or challenging web design projects from our clients. We can create the Ultra-modern website design that will make our clients business appear competitive online.

கூகுள் தேடலில் பிபா 2014 உலகக்கிண்ண தகவல்கள்பல்வேறு தகவல்களையும் இலகுவாக தேடித்தரும் கூகுள் தேடுதளமானது மிகப்பிரம்மாண்டம...
10/06/2014

கூகுள் தேடலில் பிபா 2014 உலகக்கிண்ண தகவல்கள்

பல்வேறு தகவல்களையும் இலகுவாக தேடித்தரும் கூகுள் தேடுதளமானது மிகப்பிரம்மாண்டமான நிகழ்ச்சியான பிபா 2014 உலகக் கிண்ண தகவல்களை திரட்டித் தருவதற்கு தயாராக உள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பமாகும் காற்பந்தாட்ட உலகக் கிண்ணப்போட்டி தொடர்பான அனைத்து தகவல்களையும் மொபைல் சாதனங்கள் உட்பட அனைத்து கணனிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்காக world cup எனுப் பதத்தினை மட்டும் கொண்டு கூகுள தேடுதளத்தில் தேடினால் போதும் போட்டி நடைபெறும் நாள், நேரம், மோதும் அணிகள் உட்பட்ட அட்டவணைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

பாதுகாப்பான மின்னஞ்சல் பரிமாற்றத்திற்காக கூகுள் அறிமுகம் செய்யும் நீட்சிஜிமெயில் ஊடாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களை ஹேக்கர...
10/06/2014

பாதுகாப்பான மின்னஞ்சல் பரிமாற்றத்திற்காக கூகுள் அறிமுகம் செய்யும் நீட்சி

ஜிமெயில் ஊடாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களை ஹேக்கர்களிடமிருந்தோ அல்லது வேண்டத்தகாதவர்களிடமிருந்தோ பாதுகாப்பதற்காக கூகுள் நிறுவனம் குரோம் உலாவிக்காக புதிய நீட்சி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
அல்பா பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்ந நீட்சியானது மின்னஞ்சல்களை என்கிரிப்ட் (Encrypt) செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நீட்சியில் சில குறைபாடுகள் காணப்படுவதானல் தொடர்ந்தும் சோதனைப் பதிப்பில் உள்ளது.

அனைத்து குறைபாடுகளும் நீக்கப்பட்ட பின்னர் குரோம் வெப் ஸ்டோரில் இந்த நீட்சி பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.

அதன் பின்னர் குரோம் உலாவியை பயன்படுத்தும் பயனர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மெல்லிய தோற்றமுடைய ஸ்மார்ட் கைப்பேசிசோனி நிறுவனம் Xperia Z3 எனும் மெல்லிய தோற்றம் கொண்ட அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை ...
10/06/2014

மெல்லிய தோற்றமுடைய ஸ்மார்ட் கைப்பேசி

சோனி நிறுவனம் Xperia Z3 எனும் மெல்லிய தோற்றம் கொண்ட அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
7 மில்லிமீற்றர்கள் தடிப்புடையதாகவும், முற்றிலும் புதிய வடிவமைப்பு உடையதாகவும் இந்த கைப்பேசி உருவாக்கப்படுகின்றது.

இது 5.2 அங்குல அளவு,1920 x 1080 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டதாகவும், 2.7GHz வேகத்தில் செயற்படக்கூடிய Qualcomm Snapdragon 805 Mobile Processor, 3GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாகவும் 20.7 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்படுகின்றது.

இக்கைப்பேசி எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கைப்பேசியை காணவில்லையா? கூச்சலிடுங்கள்கனடாவைச் சேர்ந்த மாட் வெய்செய் என்ற நபர், காணாமல் போன கைப்பேசியை கண்டுபிடிப்பதற்கு...
10/06/2014

கைப்பேசியை காணவில்லையா? கூச்சலிடுங்கள்

கனடாவைச் சேர்ந்த மாட் வெய்செய் என்ற நபர், காணாமல் போன கைப்பேசியை கண்டுபிடிப்பதற்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
அதாவது, குரலை அடையாளப்படுத்திக்கொண்டு, பதில் அளிக்கும் தொழில்நுட்பம். இதற்கு ‘‘மார்கோபோலோ அப்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இதன்படி, கைப்பேசி தொலைந்து விட்டால் ‘மார்கோ’ என்று கூச்சலிட வேண்டும். உடனே அந்த கைப்பேசி ‘போலோ’ என்று பதில் கூச்சல் எழுப்பும்.

அதன்மூலம் கைப்பேசியின் இருப்பிடத்தை அறியலாம். இதற்காக ‘மார்கோ’ என்ற வார்த்தை அந்த கைப்பேசிக்கு பழக்கப்பட வேண்டும்.

சந்தையை கலக்கும் நோக்கியா போன்கள்இந்தியாவில் நோக்கியா லூமியா 630, லூமியா 630 டூயல் சிம் என இரண்டு புதிய மொபைல் போன்களை ந...
10/06/2014

சந்தையை கலக்கும் நோக்கியா போன்கள்

இந்தியாவில் நோக்கியா லூமியா 630, லூமியா 630 டூயல் சிம் என இரண்டு புதிய மொபைல் போன்களை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த போன்கள் குறித்து சென்ற மாதம் அறிவிப்பு வெளியானது.

இவற்றில் தெளிவான Black IPS Display தரும் 4.5 அங்குல திரை, Corning Gorilla Glass பாதுகாப்புடன் தரப்பட்டுள்ளது.

இதன் Snapdragon 400 Quad Core Processor 1.2 gHZ வேகத்தில் இயங்குகிறது.

விண்டோஸ் போன் 8.1 OS முன்புறமாக 720p HD வீடியோ பதிவு மேற்கொள்ளக் கூடிய 5 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது.

இதே வடிவமைப்பில் இரண்டு சிம் இயக்கம் கொண்டதாக, இரண்டாவதாகக் கூறப்பட்ட போன் வெளிவந்துள்ளது.

இரண்டு சிம்களுக்கிடையே அழைப்புகளை முன்னோக்கி அனுப்பும் வசதி தரப்பட்டுள்ளது. இரண்டிலும் 1830 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்படுகிறது.

இவற்றின் RAM நினைவகம் 512 எம்.பி. கொள்ளளவு கொண்டது. இதன் Storage 8 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம்.

Toshiba அறிமுகம் செய்யும் Windows 8.1 டேப்லட்Toshiba நிறுவனம் Encore 7 எனும் Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொ...
07/06/2014

Toshiba அறிமுகம் செய்யும் Windows 8.1 டேப்லட்

Toshiba நிறுவனம் Encore 7 எனும் Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த டேப்லட் ஆனது 7 அங்குல அளவுடையதும், 1024 x 600 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Intel Atom Z3735 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

இவற்றுடன் 16GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விலையானது 100 தொடக்கம் 150 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வசதிகளுடன் Google Hangoutsஅன்ரோயிட் சாதனங்களுக்காக கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட Google Hangouts அப்ப...
07/06/2014

புதிய வசதிகளுடன் Google Hangouts

அன்ரோயிட் சாதனங்களுக்காக கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட Google Hangouts அப்பிளிக்கேஷன் தற்போது பிரபலமாகி வருகின்றது.
இந்நிலையில் புதிய வசதிகளுடன் கூடிய புதிய பதிப்பு ஒன்றினை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2.1ம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனில் பயனர்கள் தாம் விரும்பிய ரிங்கிங் டோனை மாற்றியமைக்கக்கூடிய வசதியும், அறிவிப்புக்களுக்கான(Notifications) தனித்தனியான டோன்களை தனித்தனியாக மாற்றியமைக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

இதனை கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் பிபா 2014 உலகக் கிண்ண மைதானங்கள்பிபா கால்பந்தாட்ட உலகக் கிண்ணப்போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் ...
07/06/2014

கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் பிபா 2014 உலகக் கிண்ண மைதானங்கள்

பிபா கால்பந்தாட்ட உலகக் கிண்ணப்போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன.
இந்நிலையில் உலக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இருந்த இடத்திலிருந்தே இணையத்தளத்தினூடாக பார்க்கும் வசதியை ஏற்படுத்தியுள்ள கூகுள் ஸ்ட்ரீட் வியூ சேவையில் உலகக் கிண்ணம் இடம்பெறவுள்ள பிரேஸிலின் 12 மைதானங்களின் முப்பரிமாண படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மைதானங்களுக்கு வெளியில் உள்ள பிரதேசங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பமாகும் பிபா உலகக்கிண்கப் போட்டிகள் ஜுலை மாதம் 13ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்பிளின் புதிய சாதனைதொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருந்து வரும் அப்பிள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.இதுவரையிலும்...
04/06/2014

அப்பிளின் புதிய சாதனை

தொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருந்து வரும் அப்பிள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.
இதுவரையிலும் 800 மில்லியன் வரையான iOS சாதனங்களை விற்பனை செய்துள்ளது.

இதில் கடந்த வருடத்தில் மட்டும் 130 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை அப்பிள் நிறுவனம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஆரம்பமான 2014ம் ஆண்டிற்கான Worldwide Developer Conference நிகழ்விலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 400 மில்லியனுக்கும் அதிகமானவை iPhone கள் எனவும், 200 மில்லியன் வரையானவை iPad கள் எனவும், 100 மில்லியன் வரையானவை iPod Touch சாதனம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்திற்காக ஒரு பில்லியன் டொலர்கள் செலவிடும் கூகுள்சில மாதங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் Drone வகை சிறி...
04/06/2014

நவீன தொழில்நுட்பத்திற்காக ஒரு பில்லியன் டொலர்கள் செலவிடும் கூகுள்

சில மாதங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் Drone வகை சிறிய ரக விமானங்களைப் பயன்படுத்தி இணைய வசதியை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தமை தெரிந்ததே.
இந்நிலையில் தற்போது சட்டர்லைட் தொழில்நுட்பத்தின் மூலம் இணைய வசதியினை வழங்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்யும் கூகுள் நிறுவனம் 180 சட்டர்லைட்களை விண்ணில் நிலைநிறுத்தவுள்ளதுடன், அவை தற்போதுள்ள ஏனைய சட்டர்லைட்களை விடவும் பூமியிலிருந்து குறைந்தளவு உயரத்திலேயே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஆரம்ப கட்ட செலவாகவே ஒரு பில்லியன் டொலர்கள் காணப்படுவதுடன் எதிர்காலத்தில் இத்தொகை 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

புது வரவுகள் பற்றிய தகவல்களை வெளியிட்டது Asusதரம் வாய்ந்த இலத்திரனியல் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Asus ஆ...
04/06/2014

புது வரவுகள் பற்றிய தகவல்களை வெளியிட்டது Asus

தரம் வாய்ந்த இலத்திரனியல் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Asus ஆனது MeMO Pad 7 மற்றும் 8 எனும் இருவகையான சாதனங்களை உருவாக்கியுள்ளது.
64-bit Intel Atom Processors இனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இச்சாதனங்கள் தொடர்பான அறிவித்தலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி Asus MeMO Pad 7 ஆனது 7 அங்குல அளவு, 1280 x 800 Pixel Resolution உடைய தொடுதிரையினையும், 1.86GHz வேகத்தில் செயற்படக்கூடிய 64-bit Intel Atom Z3745 Quad-Core Processor இனையும் கொண்டுள்ளது.

இவற்றுடன் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றுடன் 16GB சேமிப்பு நினைவகமும் தரப்பட்டுள்ளது.

Asus MeMO Pad 8 ஆனது 8 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினையும், 2.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய 64-bit Intel Atom Z3580 Quad-Core Processor இனையும் உள்ளடக்கியுள்ளது.

Address

Ambattur
Chennai
600053

Alerts

Be the first to know and let us send you an email when iNet Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to iNet Technology:

Share