Infosystem Salem

Infosystem Salem This page is about our Computer Service,Sales and latest information about the Softwares, and Issues

01/09/2014

ADD DESCRIPTION HERE

29/07/2014

This is our own blog for android application development tutorial

முகநூல் வீடியோக்களை மென்பொருள் இல்லாமல் டவுன்லோட் செய்ய எளிய வழி..! முகாநூல் பக்கத்தில் நாம் பார்த்த வீடியோக்கள் ஏதேனும்...
16/07/2014

முகநூல் வீடியோக்களை மென்பொருள் இல்லாமல் டவுன்லோட் செய்ய எளிய வழி..!

முகாநூல் பக்கத்தில் நாம் பார்த்த வீடியோக்கள் ஏதேனும் ஒன்று நம்மை மிகவும் கவர்ந்து விடும். அந்த வீடியோவை டவுன்லோட் செய்ய நினைக்கும் போது அதற்கான வசதியை முகநூல் வழங்கவில்லை. மாறாக தற்சமயம் அவசரமாக டவுன்லோட் செய்ய மென்பொருட்களையும் தரவிறக்க செய்து வீடியோவை டவுன்லோட் செய்ய அதிக நேரம் ஆகிவிடும்.

இந்த குறையை நிவர்த்தி செய்ய புதிய வழி ஒன்று உள்ளது. இதற்கு மென்பொருள் தேவையில்லை, எந்த வேண்டுமானாலும், எந்த கணினியில் வேண்டுமானாலும், இந்த முறையை பயன்படுத்தி எளிதில் வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

வீடியோவை டவுன்லோட் செய்ய பின் வரும் வழிகளை பின் பற்றுங்கள்:-

keepvid11.முகநூல் பக்கத்தில் நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோ கோப்பின் மேல் Right-Click செய்து Copy Link Address என்பதை சுட்டுக. இது சில இணைய உலாவிகளில் Copy Link Location என்றும் இருக்கலாம்.

2.பின் அதனை www.keepvid.com எனும் இணைய தளத்துக்குச் சென்று அதில் தரப்பட்டுள்ள கட்டத்தில் Paste செய்க.

keepvid23.பின்பு Download எனும் Button ஐ அழுத்தும் போது குறிப்பிட்ட வீடியோ கோப்பினை தரவிறக்குவதற்கான இணைப்புடன் தோன்றும். குறிப்பு:- டவுன்லோட் என்ற பச்சை கலரில் ஒரு படம் இருக்கு அதை அழுத்தினால் தேவையில்லாத லிங்க்களுக்கு செல்லும். கீழே உள்ள படத்தை பாருங்கள். அதில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கும்.

4.இனி அந்த இணைப்பை சுட்டும் போது தோன்றும் புதிய சாரளத்தில் உங்கள் வீடியோ கோப்பு இயங்க ஆரம்பிக்கும்.

5.பிறகு அதனை Right Click செய்து Save Video என்பதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ கோப்பினை உங்கள் கணனியில் தரவிறக்கி சேமித்துக் கொள்ளலாம்.

ரூ.2,500 சந்தையை மிரட்டும் நோக்கியா 220 மொபைல்; 51 மணிநேரம் இயங்கும் சக்தி கொண்டது தொடக்க நிலை மொபைல் போன்களில், இரண்டு ...
14/07/2014

ரூ.2,500 சந்தையை மிரட்டும் நோக்கியா 220 மொபைல்; 51 மணிநேரம் இயங்கும் சக்தி கொண்டது


தொடக்க நிலை மொபைல் போன்களில், இரண்டு சிம் இயக்கம் தரும் நோக்கியா மொபைல் போனாக, நோக்கியா 220 உள்ளது. இதன் பரிமாணம் 116.4 x 50.3 x 13.2 மிமீ. எடை 83.6 கிராம். கேண்டி பார் வடிவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குல அகலத்திலான வடிவமைப்பில் உள்ளது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, லவுட் ஸ்பீக்கர், எம்.பி.3., எம்.பி.4 பிளேயர்கள், மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு புளுடூத் 3.0., யு.எஸ்.பி., ஜி.பி.ஆர்.எஸ்.ஆகியவை இயங்குகின்றன. இதன் கேமரா 2 எம்.பி. திறன் கொண்டது. வீடியோ பதிவும் இதனைக் கொண்டு மேற்கொள்ள முடியும். இதில் ஆர்கனைசர், வாய்ஸ் மெமோ மற்றும் பிரிடெக்டிவ் டெக்ஸ்ட் உள்ளீடு ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 1,100 mAh திறன் கொண்டது. இதனைக் கொண்டு தொடர்ந்து 15 மணி நேரம் பேச முடியும். 51 மணி நேரம் மியூசிக் பைல்களை இயக்க முடியும். இதன் அதிக பட்ச விலை ரூ. 2,500

http://www.ta.newstig.com/wp-content/uploads/2014/05/nokia-220-newstig-640x360.jpg

14/07/2014

கூகுளின் புதிய புரட்சி; இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனை..!

ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம் போட்டோவை அப்லோடு செய்தால், அங்கங்கே தட்டி, உருட்டிப் புரட்டி, தலைமுடிக்கு வெள்ளை பெயின்ட் அடித்து, இப்படித்தான் இருப்பீர்கள் என அந்தத் தளங்கள் காட்டவும் செய்கின்றன.

வெகு காலமாக கணினித் துறைக்கு இது சவாலாகவே இருந்து வந்தது. காரணம், சிலருக்கு 5 வயது போட்டோவை 25 வயதில் எடுத்துப் பார்த்தாலே சம்பந்தமே இல்லாத யாரோ போல் தோன்றும். வேறு சிலருக்கோ 5 வயதில் இருக்கும் முகம் 50 வயதிலும் அப்படியே இருக்கும். யாருடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும் என்றுதான் இத்தனை நாட்களாக நினைத்திருந்தோம். ஆனால், இந்த ஆராய்ச்சி அந்த மாயையை உடைத்துவிட்டது.

குழந்தையின் கண், மூக்கு, காது, உதடு போன்றவை எந்த வடிவத்தில் இருந்தால் அது காலப் போக்கில் மாறும். எந்த வடிவத்தில் இருந்தால் காலத்தால் மாறாதிருக்கும் என்ற பொது விதியை நாங்கள் கண்டறிந்து விட்டோம் என ஆய்வுக்குத் தலைமை ஏற்றிருக்கும் வோஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியை கெமல்மெசர் தெரிவித்துள்ளார்.

இதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கான மனிதர்களின் சிறு வயதுப் புகைப்படங்களை சேகரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வயதிலும் ஒரே மாதிரியாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்து வைத்திருப்பவர்களைத் தேடிப் பிடித்திருக்கிறார்கள். அந்தப் படங்களைத் துல்லியமாக ஆராய்ந்ததன் மூலம், ஒரு மனிதனின் முகத்தில் வயது ஏற்படுத்தும் மாற்றங்களை வரையறுக்க முடிந்திருக்கிறது. அந்த மாற்றங்கள் ஆணுக்கு வேறு பெண்ணுக்கு வேறு மாதிரி இருக்கும் என்பதும் தெளிவாகி இருந்திருக்கிறது.

அந்த இலக்கணங்களை கணினி கட்டளைகளாக்கித்தான் இந்த மென்பொருளை உருவாக்கியிருக்கிறோம். தற்போது இந்த மென்பொருளில் 6 வயதுப் பையனின் புகைப்படத்தை உள்ளீடு செய்தால், அவன் முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என்றெல்லாம் 30 விநாடிகளில் காட்டி விடுகிறது. இதுவரை வயோதிப மாற்றங்களை இவ்வளவு துல்லியமாக எந்த மென்பொருளும் காட்டியதில்லை. எனப் பெருமிதம் கொள்கிறார் கெமல்மெசர். இந்த நம்பிக்கை இவர்களுக்கு தானாக வரவில்லை. இன்றைய வயோதிபர் ஒருவரின் சிறு வயது போட்டோவை இந்த மென்பொருளில் இட்டு சோதித்திருக்கிறார்கள்.

மென்பொருள் தந்த வயோதிக முடிவு சரியாக அந்தத் வயோதிபரின் சமீபத்திய போட்டோ போலவே இருந்திருக்கிறது. மக்களின் இந்த ஆர்வம் தெரிந்துதான் இணையத்தின் இமயமான கூகுள் நிறுவனமும் இன்டெல் நிறுவனமும் இந்த ஆராய்ச்சிக்கு பொருளுதவி செய்திருக்கின்றன. கூடிய சீக்கிரமே இது கூகுள் தேடுபொறியோடு இணைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரலாம்! இப்படியே வளர்ந்துகிட்டுப் போனா, இன்னும் 80 வருடத்தில் நம்ம உலகம் எப்படி இருக்கும்

14/07/2014

ஆன்டி-வைரஸ் மென்பொருட்கள் இல்லாமல் வைரஸ்களை நீக்கும் எளிய வழி..!



பெரும்பாலனவர்கள் தகவல்களை சேமிக்கும் பொருளாக USB DISK என்று சொல்லக்கூடிய பென்டிரைவ் தான் பயன்படுத்துவார்கள். இதில் அவர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்வார்கள்.

இதில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை வைரஸ். அதுவும் பென் டிரைவ் என்றாலே சீக்கரம் வந்து ஒட்டிக்கொள்ளும் இந்த கெடுதல் செய்யும் புரோக்ராம். இதனால் நமது தகவல்களை நாம் பார்க்க முடியாமல் போய்விடலாம். நம் வைத்திருக்கும் போல்டர்கள் காணாமல் போய்விடக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம்.

இந்த வைரஸ்களை நீக்க கணினியில் ஆன்டி-வைரஸ் மென்பொருட்கள் இல்லாமல் போகும். எனவே இது போன்ற அவசர காலங்களில் எந்த வித மென்பொருட்களும் இல்லாமல் வைரஸ்களை நீக்க ஒரு எளிய வழி உள்ளது.

இதை ஏற்கனவே பல இடங்களில் நிறைய பேர் படித்திருப்பீர்கள். ஆனாலும் சிலருக்கு இன்னும் இந்த விஷயம் தெரியாமல் இருக்கும் அவர்கள் தெரிந்து கொள்ளத் தான் இந்த பதிவு…!

பழுதான பென்ட்ரைவ்வை உங்கள் கணினியில் இணையுங்கள். பென்டிரைவ் எந்த டிரைவில் உள்ளது என்பதை நீங்கள் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். அதாவது, G: அல்லது வேறெந்த டிரைவில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு,

உங்கள் கணினியில் START+R அழுத்துங்கள். கீழே RUN சிறிய பாக்ஸ் ஓபன் ஆகும். அதில் CMD என டைப் செய்து Enter தட்டுங்கள்.

g driveஇப்பொழுது comment prompt என்ற விண்டோ தோன்றும், அதில் உங்கள் பென்டிரைவ் எந்த ட்ரைவ் லொக்கேசனில் உள்ளதோ அந்த ட்ரைவின் லெட்டருடன் கோலன் சேர்க்கவேண்டும். உதாரணம் உங்கள் பென்ட்ரைவ் G என்ற ட்ரைவில் இருந்தால் G: என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள்.

பிறகு attrib -r -a -s -h *.* இந்த வார்த்தையை சரியான இடைவெளியில் (space) கொடுத்து என்டர் செய்யுங்கள்.

ஒரு சில வினாடிகளில் உங்கள் பென்டிரைவில் அனைத்து கோப்புகளும் மீட்கப்பட்டிருக்கும். மீண்டும் உங்கள் பென்ட்ரைவ்யை ஓபன் செய்து கோப்பைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சரியாக புரியாதவர்கள் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பதிவு பயனுள்ளதாக இருந்ததா என்பதையும் சொல்லிவிட்டுப்போங்கள். இந்த விஷயம் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள இந்த தகவலை ஷேர் செய்யுங்கள். நன்றி..!


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aybAZcYPuGU =0

How to remove viruses from USB memory and other computer drives from Command Prompt and how to open Drives in secure way....

Address

Salem
636003

Telephone

9677480485

Website

Alerts

Be the first to know and let us send you an email when Infosystem Salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Infosystem Salem:

Share