06/05/2026
இந்த SONY கேசட் பிளேயர் இனி ரிப்பேர் சரிசெய்ய முடியாது. ஸ்கிராப்பில் போடாமல் கேசட் door இருந்த இடத்தை கட் பண்ணி USB player மாடூல் மாட்டி விட்டால் மீண்டும் SONY கம்பீரமாக பாட ஆரம்பித்துவிடும்!
1963ல் பிலிப்ஸ் நிறுவனம் கொண்டு வந்த கேசட் தொழில் நுட்பம்...ரேடி யோ மட்டுமே பொழுது போக்காக இருந்த 60s. காலத்தில்
80- 90 களில் கேசட் பிளேயரில் பாடல் கேட்டது ஒரு பொற்காலம்!
D60 - 12 பாடல்களும் D90 - 18 பாடல்களும் பதியலாம்.
கேசட் சென்டரில் கேட்லாக் தருவார்கள். அழகிய கை எழுத்தில் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி பாடல்களை எழுதி இருப்பார்கள்.
சாதா ஸ்டீரியோ, ஈக்வலைசர், எக்கோ என்று பல வகைகளில் பதிந்து தருவார்கள்.
கேடலாகில் உள்ள ஆயிரம் பாடல்களில் பொறுமையாக புரட்டி பார்த்து நமக்கு பிடித்த 12 பாடலை மட்டும் செலெக்ட் பண்றது ஒரு கலை. ஆர்டர் கொடுத்தால் ஒரு வாரம் கழித்துதான் தருவார்கள்.
பதிந்து தரும் போது ஒரு அழகிய கார்டில் பதிந்த பாடல்களை எழுதி தருவார்கள்.
வாங்கி வீட்டுக்கு வந்தவுடன் அந்த பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு ரசிப்போம். இப்போ ஃபோனிலேயே ஆயிரம் பாட்டு இருந்தாலும்...அந்த சின்ன கேசட்டில் பாட்டு கேட்ட காலம் ஒரு பொற்காலம்தான்!
பிள்ளைகளின் மழலைகளை பதிவு செய்து கேட்டோம். நாம் தபாலில் எழுத வேண்டிய விஷயங்களை பேசி பதிந்து யாரிடமாவது கொடுத்து அனப்புவோம். பதிலுக்கு அங்கிருந்து ரிப்ளை கேசட் யார் மூலமாவது வரும் Voice message!
சிலர் மென்மையாக பாடலை மட்டும் கேட்டு ரசிப்பார்கள்.
பலருக்கு ஆம்ப்ளிஃபயர் மூலம் அதிக பாஸ் ட்ரிபிள் வைத்து ரசிப்பார்கள். முக்கியமாக ஆங்கில டிஸ்கோ பாடல்கள்.
மண்பானையில் ஸ்பீக்கர் செட் பண்ணி வீடு அதிர பாட்டு கேட்டவர்கள் 90s கிட்ஸ்!
வாக்மேனில் பாட்டு கேட்டபடி பயனம் செல்வது ஒரு பெரிய மகிழ்ச்சி.