15/08/2026
🍪 “Accept All Cookies” என கிளிக் செய்யும் போது, நீங்கள் என்னவற்றை இழக்கிறீர்கள் என்று தெரியுமா?
இணையத்தளங்களுக்குச் செல்லும்போது இந்த அறிவிப்பை நீங்கள் பார்த்திருப்பீர்கள்:
"உங்கள் அனுபவத்தை மேம்படுத்த நாங்கள் Cookies-களைப் பயன்படுத்துகிறோம்."
அங்கே உங்களுக்கு இரண்டு தெரிவுகள் இருக்கும்:
🍪 Accept All
🛡️ Reject Non-Essential
பெரும்பாலானோர் எவ்வித யோசனையுமின்றி Accept All என்பதையே கிளிக் செய்கிறார்கள். ஆனால், அதற்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? Cookies உங்களது கடவுச்சொற்களைத் திருடுகின்றனவா? உங்களது செயற்பாடுகளைக் கண்காணிக்கின்றனவா? அல்லது உங்களது தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கின்றனவா?
உண்மை என்னவென்றால், Cookies உங்களைக் உளவுபார்ப்பதற்காக உருவாக்கப்படவில்லை.
1994 ஆம் ஆண்டில், Netscape பொறியியலாளர் Lou Montulli என்பவர், அன்றைய இணைய உலகிலிருந்த ஒரு எளிய பிரச்சினைக்குத் தீர்வாகவே HTTP Cookies-களை உருவாக்கினார்.
👉 ஆரம்பகால இணையத்திற்கு நினைவாற்றல் (Memory) இருக்கவில்லை.
Cookies இல்லாதிருந்தால், நீங்கள் உள்நுழைந்திருப்பதை (Log in) ஒரு இணையத்தளத்தால் நினைவில் வைத்திருக்க முடியாது. நீங்கள் அடுத்த பக்கத்திற்குச் செல்லும்போது உங்களது தெரிவுகளும், Shopping Cart-இல் சேர்த்த பொருட்களும் மறைந்துவிடும்.
🏷️ Cookie என்பதை Food City-இல் நீங்கள் பெறும் "டோக்கனுக்கு" (Token) ஒப்பிடலாம்!
🛒 நீங்கள் Food City-க்குள் நுழையும்போது, உங்கள் பையைக் கொடுத்துவிட்டு ஒரு சிறிய டோக்கனைப் பெறுகிறீர்கள்.
🚪 பொருட்களையெல்லாம் வாங்கி முடித்துவிட்டு வெளியேறும்போது (Exiting) அந்தத் டோக்கனைக் காண்பித்ததும், "ஆமாம், இது உங்களுடைய பைதான்!" என்று ஊழியர் உங்களை அடையாளம் கண்டு பையைத் திரும்பத் தருகிறார்.
அதேபோலத்தான் இணையத்திலும் நடக்கிறது:
🔹 நீங்கள் ஒரு இணையத்தளத்திற்குச் செல்லும்போது, அது உங்கள் உலாவியிற்கு (Browser) ஒரு சிறிய டோக்கனை (Cookie) வழங்குகிறது.
🔄 நீங்கள் தளத்திலிருந்து வெளியேறி மீண்டும் உள்ளே நுழையும்போது, உங்கள் உலாவி அந்தத் டோக்கனைக் காண்பித்து "நான் ஏற்கெனவே வந்தவன்தான்!" என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறது.
🍪 First-Party vs. Third-Party Cookies
🔹 First-Party Cookies: நீங்கள் நேரடியாகப் பார்வையிடும் இணையத்தளத்தால் உருவாக்கப்படுபவை. நீங்கள் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்யவும், உங்களது விருப்பங்களைச் சேமிக்கவும் இவை உதவுகின்றன.
🎯 Third-Party Cookies: விளம்பர நிறுவனங்கள் மற்றும் ஏனைய வெளிப்புறக் கருவிகளால் உருவாக்கப்படுபவை. இவை பல இணையத்தளங்கள் ஊடாகவும் உங்களது இணையப் பயன்பாட்டுப் பழக்கங்களைக் கண்காணித்து, உங்களது ரசனைகளுக்கேற்ப விளம்பரங்களைக் காண்பிக்கப் பயன்படுகின்றன.
🛡️ நீங்கள் எப்போதும் "Accept All" கொடுக்க வேண்டுமா?
அவசியமில்லை. இணையத்தளத்தின் அத்தியாவசிய செயற்பாடுகளுக்குச் சில Cookies தேவைப்பட்டாலும், விளம்பரங்கள் மற்றும் தேவையற்ற கண்காணிப்புகளுக்கு பயன்படும் Cookies-களைத் தவிர்க்க "Reject Non-Essential" என்பதைத் தெரிவுசெய்வதே உங்களது தரவுப் பாதுகாப்பிற்குச் சிறந்ததாகும்.
தனிநபர் தரவுப் பாதுகாப்பைப் பேணுவதற்கு நீங்கள் தொழில்நுட்ப வல்லுநராக இருக்க வேண்டிய அவசியமில்லை. கிளிக் செய்வதற்கு முன், என்ன பொத்தானைக் கிளிக் செய்கிறோம் என்பதைச் சற்று கவனித்தாலே போதுமானது.
தொழில்நுட்பங்களை எளிமையாகப் புரிந்து கொண்டு, இணைய உலகை பாதுகாப்பாகப் பயன்படுத்த Yarl IT எப்போதும் உங்களுடன் பயணிக்கிறது. 🌐